#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பில் செலுத்தாத கனெக்சனை கட் செய்த மின்வாரிய பொறியாளர் மீது தாக்குதல்.. நெஞ்சில் ஒரே மிதி.!
நிலுகையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததால் மின்வாரிய பொறியாளர் மின் விநியோகத்தை தடை செய்த நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து பொறியாளரை நெஞ்சில் மிதித்து கைதாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கர்வான் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் துணைநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். நீண்ட நாட்களாக மின் கட்டணம் செலுத்தாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, விஜயகுமார் மேற்பார்வையில் வீடுகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த உள்ளூர் இளைஞர், தனது தரப்பு ஆதரவாளர்களை அழைத்து வந்து விஜயகுமாரிடம் பிரச்சனை செய்துள்ளார். மேலும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் செய்தவாறு, மின்வாரிய அதிகாரி விஜயகுமாரின் நெஞ்சில் ஓங்கி மிதித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாப்பாச்சபுட்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரின் ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.