தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இங்கே அத்துமீறாதே,.இது என் கிருஷ்ணன் விளையாடிய இடம்!..17 மாதங்கள் போராடி உயிரை விட்ட சாமியார்..!
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் சுரங்கங்களில் இருந்து கனிமங்கள் மற்று மணல் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே, இந்த சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அமைந்துள்ள பகுதிகள் எல்லாம் இந்து மத கடவுளான கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதிகள். எனவே இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் விஜய் ராகவ் தாஸ் என்ற சாமியார் ராஜஸ்தானில் உள்ள பசோபா என்ற கிராமத்தில் தனது போராட்டத்தை தொடங்கினார்.
கடந்த 19 மாதங்களாக அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவரது போராட்டத்தின் 550 வது நாளான கடந்த 20 ஆம் தேதியன்று சாமியார் விஜய் ராகவ் தாஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடுமையான தீக்காயங்கள் அடைந்த சாமியார் விஜய் ராகவ் தாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து சாமியார் விஜய் ராகவ் தாஸ் ராஜஸ்தானில் இருந்து டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சாமியார் ராகவ் தாஸ் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த சாமியார் விஜய் ராகவ் தாசின் உடலை அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானா பகுதியில் நேற்று தகனம் செய்துள்ளனர்.