அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
லிப்டில் சிக்கியிருந்தும், சமத்தாக ஹோம் ஒர்க் செய்து முடித்த சிறுவன்!!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கார்பெட் என்னும் எட்டு வயது சிறுவன், அவர் வசிக்கும் நாலாவது மாடியில் இருந்து டியூஷன் செல்வதற்காக புறப்பட்டு உள்ளார். அப்போது லிப்டில் செல்லும்போது எதிர்பாராத விதமாக அவர் லிப்டில் சிக்கியுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்தியும், கதவை தட்டி சத்தம் போட்டும் உதவுவதற்கு யாரும் வரவில்லை. இதனால் சற்றும் சலிக்காத சிறுவன் பயப்படாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்து கொண்டு ஹோம் ஒர்க்கை செய்ய ஆரம்பித்துள்ளான்.
பின்னர், அங்கு வந்த தொழில்நுட்பக் குழு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு லிப்டை சரி செய்துள்ளனர். பின்னர் உள்ளே சிக்கி இருந்த சிறுவனையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். லிப்டில் சிக்கிய போதும், சற்றும் தளராமல் ஹோம் ஒர்க் செய்து முடித்த சிறுவனை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.