கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கருப்பாக இருப்பதாக கூறி... கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை தாக்கி... வெளியேற்றிய அறங்காவலர்...!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமிர்தஹள்ளி பகுதியில் இருக்கும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனை கிருஷ்ணப்பா என்பவர் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண்ணை தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கோயிலுக்கு வந்த பெண் குளிக்காமல் கோவிலுக்குள் வந்ததாகவும், அந்த பெண் தூய்மையாக இல்லை என்றும், கருப்பாக இருப்பதாகவும் செல்லி, அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டியுள்ளார். கோயிலுக்குள் வர கூடாது என சொல்லி, இரும்பு தடியால் அடித்துள்ளார்.
கோயில் பூசாரிகள் அவரை தடுத்த போது, அவர்களை முனிகிருஷ்ணப்பா, மிரட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் முனிகிருஷ்ணப்பா தந்துள்ள புகாரில், அந்தப் பெண் கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார் அப்போது பூசாரிகள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர், அவர்களில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பினார் என்று கூறியுள்ளார்.
அதனால் அரங்காவலர் முனிகிருஷ்ணப்பா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகாரையும் பெற்று கொண்டோம். பெண் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.