சாத்துக்குடி பழச்சாறை இரத்த தட்டணுவாக விற்பனை செய்த விவகாரம்.. 10 பேர் பரபரப்பு கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!



Uttar Pradesh Blood Platelet Issue

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு போலியான பிளேட்லெட் ஏற்றப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் நகரில் செய்யப்படும் தனியார் மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் பாண்டேவுக்கு இரத்தத்தில் பிளேட்லெட் குறைவாக இருந்ததால், மருத்துவமனை சார்பில் பிளேட்லெட் ஏற்றப்பட்டது. 

ஆனால், பிளேட்லெட் பாக்கெட்டுக்குள் சாத்துக்குடி சாறு இருந்ததால் பிரதீப் பாண்டே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் பிரதீப் இறப்பிற்கான காரணம் தெரியவரவே, மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. 

நிகழ்வின் போது 5 பிளேட்லெட் பாக்கெட்டுகள் நோயாளிகளின் உறவினர்களால் மற்றொரு மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணையில் போலியான இரத்த தட்டணுக்கள் விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த கும்பல் ஏழை-எளிய மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தது உறுதியான நிலையில், அவசர கதியில் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளின் விபரத்தை பெற்று, அவர்களுக்கு என்ன தேவையோ அதில் போலியானதை தயாரித்து குடும்ப உறுப்பினர்கள் வழியே அதனை விற்பனை செய்து வந்துள்ளது. இதனால் விசாரணை தொடர்கிறது.