"உன் மனைவியை என்கூட படுக்க அனுப்பு" - லைன்மேனை மிரட்டிய ஜூனியர் எஞ்சினியர்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!



Uttar Pradesh EB Line Man Suicide JE Torture

மின்வாரிய ஜூனியர் எஞ்சினியர் லைன் மேனுக்கு தொல்லை கொடுத்து, அவரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து கொடுமை செய்ததால் லைன் மேன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர், கேரியில் உள்ள அம்மாநில மின்வாரியத்துறையில் லைன் மேனாக பணியாற்றி வருபவர் கோகுல் பிரசாத் (வயது 45). இவர் கடந்த 22 வருடமாக மின்வாரிய துறையில் லைன் மேனாக பணியாற்றுகிறார். இவரின் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய ஜூனியர் எஞ்சினியருக்கும், கோகுலுக்கும் இடையே பிரச்சனை நடந்து வந்ததாக தெரியவருகிறது. 

இதனால் மேலிட அதிகாரியான ஜூனியர் எஞ்சினியர், கோகுலை பல வகைகளில் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அவரை சமீபத்தில் வேண்டும் என்றே வேறொரு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில், அதனை கோகுல் கேட்டுள்ளார். அப்போது, ஜூனியர் எஞ்சினியர் நீ பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தவிர்க்க வேண்டும் என்றால், உன் மனைவியை படுக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். 

Uttar pradesh

இதனால் மனவேதனையடைந்த கோகுல் பிரசாத் விஷயம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மனதளவில் துயரத்தில் இருந்த கோகுல், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிருக்கு போராடியவரை மீட்டு லக்னோ அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

லைன் மேன் கோகுலுக்கு ஜூனியர் எஞ்சினியர் அளித்த தொல்லை தொடர்பாக கோகுல் இறப்பதற்கு முன் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.