#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயது சிறுமி பலாத்காரம்; காதலர் தின பரிசு தருவதாக நடந்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியை கடந்த காதலர் தினத்தன்று இளைஞர் அங்குள்ள வயல் வெளிப்பகுதிக்கு பரிசு தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி வற்புறுத்திய இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியும் சென்றுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு நாட்கள் பயந்து, பின் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குற்றவாளியை கைது செய்தனர்.