"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
செல்பி எடுக்க முயற்சித்த மாணவிக்கு இப்படியா சோகம் நடக்கணும்... நண்பர்கள் கண்முன் துயரம்.!
செல்பி எடுக்க முயற்சித்த மாணவி, தடுப்பணை நீரில் விழுந்து பலியாகினார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டியில், புவி அறிவியல் துறையில் இரண்டாம் வருடம் பயின்று வந்த மாணவி செஜல் ஜெயின். இவர் தனது சக நண்பர்களுடன் கங்கை தடுப்பணை பகுதிக்கு நேற்று சென்றுள்ளார்.
அங்கு வைத்து, மாணவி செஜல் ஜெயின் செல்பி எடுக்க முயற்சித்த நேரத்தில், கால் இடறி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஐ.ஐ.டி செய்தி தொடர்பாளர் கிரீஷ் பந்த் தெரிவிக்கையில், "மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மாணவி செஜல் ஜெயின் உட்பட 7 பேர் கங்கை தடுப்பணைக்கு சென்றுள்ளார். இவர்கள் பாலத்தின் பாதுகாப்பு தடுப்பினை கடந்து சென்று, மாணவி செஜல் ஜெயின் மட்டும் தனியாக செல்பி எடுக்க முயற்சிக்கையில் துயரம் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு படையினர் உதவியுடன் மாணவி செஜல் ஜெயினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.