#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இலவசமாக கோழி இறைச்சி கொடுக்க மறுத்த தலித் வியாபாரி மீது கொடூர தாக்குதல்; ஆதிக்க ஜாதி வர்க்கத்தால் நடந்த பயங்கரம்.!
வியாபாரியிடம் இலவசமாக சிக்கன் கேட்டு மிரட்டிய கும்பல், சமுதாய ரீதியாக இழிவாக பேசி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுஜன் அஹிர்வார். இவர் கோழி இறைச்சிகளை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வழக்கம்போல தனது விற்பனைக்கு புறப்பட்டு சென்ற சமயத்தில், அவரை இடைமறித்த 3 பேர் கும்பல், இலவசமாக சிக்கன் கேட்டு இருக்கிறது.
மதுபோதையில் அவர்கள் இருந்த நிலையில், தன்னால் இலவசமாக எதையும் கொடுக்க இயலாது. பணம் கொடுத்தால் சிக்கன் கொடுக்கிறேன் என சுஜன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அவரை சமுதாய ரீதியாக அவதூறாக பேசி விரட்டிவிரட்டி தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை வழிப்போக்கராக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.