எனது உயிருள்ள வரை இதனை செய்துகொண்டே தான் இருப்பேன்.! பாம்பு கொத்திய வாவா சுரேஷின் உருக்கமான பேட்டி.!



vava suresh talk about snake catch

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார்.  இந்நிலையில், சமீபத்தில் கோட்டயம் மாவட்டத்தின் குறிச்சி என்ற இடத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடித்து சாக்குப் பையில் போடும்போது சுரேஷை அந்த பாம்பு தொடையில் கொத்தியது

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியது. சுரேஷை பாம்பு கொத்திய வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவியது. பாம்பு பண்ணையில் அரசுப்பணி கிடைத்தபோதிலும் அதனை நிராகரித்த சுரேஷ், பாம்புகளிடம் இருந்து மக்களை காப்பதே தனது முதற்பணி எனக் கூறியவர். 

சிகிச்சைக்கு பின்னர், வாவா சுரேஷ் குணமடைந்தார், இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வா வா சுரேஷ் பேசுகையில், எனக்கு எதிராக பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது, வனத்துறையை சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரி தான் இதை செய்கிறார். பாம்புகளை பிடிக்க என்னை அழைக்கக்கூடாது என மக்களை எச்சரிக்கை செய்கிறார், என் உயிர் உள்ள வரை பாம்புகளை பிடிப்பேன், இனிமேல் அதிக கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.