#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வைரல் வீடியோ: டோல்கேட்டில் வேகமாக வந்த வேன்.! டமால்.. டாமால் என்று தலையில் விழுந்த அடி.!
தற்போது நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து தினசரி செல்கின்றன. சாலை விபத்துக்களில் அதிகளவு உயரிழப்பு ஏற்படுவதவற்கு முக்கிய காரணம் அதிக வேகமாக செல்வதே. சாலையில் வாகனங்களை இயக்கும் போது, மற்ற வாகனங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான இடைவெளியை வைத்துக் கொள்ளுவதும் விபத்திற்கு முக்கிய காரணம்.
மற்ற வாகனங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான இடைவெளியை வைத்து வாகனம் ஓட்டும்பொழுது டிராஃபிக் ஏற்படும் சூழ்நிலையில் உங்களுக்கு கைக்கொடுக்கும். பாதுகாப்பை கருத்தில் வைத்து வாகனம் ஓட்டினால், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் பிரேக்கிங்கை செயல்படுத்த அது உதவியாக அமையும். இல்லாவிட்டால் அடுத்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எவ்வளவு தான் சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும். சிலர் அதனை பின்பற்றுவதில்லை. இதனால் தான் நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்தநிலையில், டோல்கேட் ஒன்றில் வாகனம் ஒன்று வேகமாக வந்ததால் அதில் இருந்தவர்கள் தலையில் அடி வாங்கியுள்ளனர். டோல்கேட்டில் ஒரு வாகனம் சென்ற பின் தடுப்பு கம்பு ஒன்று வந்து குறுக்கே நிற்கும். அடுத்த வாகனம் கட்டணம் செலுத்தியபிறகு தான் அந்த தடுப்பு கம்பம் மேலே உயரும். இந்த நிலையில் டோல்கேட்டில் ஒரு வாகனம் கட்டணம் செலுத்தி சென்ற பின்னர், தடுப்பு கம்பம் கீழே வருவதற்குள் மற்றொரு வாகனம் வேகமாக வந்துள்ளது. அப்போது தடுப்பு கம்பம் திடீரென கீழே வந்ததால் அதில் பயணித்தவர்களின் தலையில் டமால்... டமால் என்று அடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Rash driving and carrying people in goods carriage is always dangerous.#RoadSafety #RoadSafetyCyberabad pic.twitter.com/NlLzbahbjm
— CYBERABAD TRAFFIC POLICE సైబరాబాద్ ట్రాఫిక్ పోలీస్ (@CYBTRAFFIC) July 8, 2021