யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!
ட்ரம்ப் இந்தியா வந்தபோது, இந்தியா என்றால் என்ன என தேடிய அமெரிக்கர்கள்..! வெளியன் அதிர்ச்சி தகவல்..!
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். தனது மனைவி மற்றும் மகளுடன் இந்தியா வந்த ட்ரம்ப் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி பார்த்ததோடு இந்தியா - அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் இந்தியா வந்திருந்த நிலையில் இந்தியா என்றால் என்ன? என அமெரிக்கர்கள் கூகிளில் தேடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருப்பவர்கள் தான் இந்த கேள்வியை அதிகம் கேட்டு கூகுளை திணறடித்து இருக்கின்றனர்.
உலகிலையே மிகப்பெரிய நாடுகளில் ஓன்று, மக்கள் தொகையில் இரண்டாவது இடம், மிகப்பெரிய ஆர்மி கொண்ட நான்காவது நாடு, உலகிற்கே சவால் விடும் இஸ்ரோ, தலைசிறந்த கிரிக்கெட் அணி இப்படி பலவித பெருமைகளை கொண்ட இந்தியாவை, இந்தியா என்றால் என்ன என அமெரிக்கர்கள் தேடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.