#Watch: போதையில் அரைநிர்வாணமாக தகராறு செய்த நடிகர் விநாயகன்; மப்பில் தலைகால் புரியாமல் செயல்.!



Actor Vinayagan Atrocity after Drinking Alcohol 

 

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி தொடருகிறது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விநாயகன், தமிழில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!

விஷாலின் நடிப்பில் வெளியான திமிரு படத்தில், கால் ஊனமுற்ற நபரை போல வில்லியுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் இன்று வரை மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில், நடிகர் விநாயகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

திமிரு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விநாயகன் அதிகளவு மக்களால் கவனிக்கப்பட்டார். மலையாளம் கலந்த தமிழில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். 

அதனைத்தொடர்ந்து, சில இடங்களில் அவர் போதையில் தகராறு செய்து வழக்கு விஷயத்தையும் எதிர்கொண்டார். இந்நிலையில், குடிபோதையில் விநாயகன் பிரச்சனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: மகத் நாயகனாக நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் ஆசை பாடல்; லிங்க் உள்ளே.!