கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தெரு நாய்க்காக சண்டை போட்ட பெண்கள்..! இறுதியில் அம்மாவை இழந்த மகள்.. கதறும் உறவுகள்.!
பெண் ஒருவர் தெரு நாய் ஒன்றை வளர்ந்துவந்த நிலையில் அதனால் ஏற்பட்ட தகராறில் நான்கு பெண்கள் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவ்லி என்னும் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மா ஷெட்டி. அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்துவரும் நாகம்மா தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகம்மாவின் வீட்டில் இருந்த அந்த தெரு நாய் அடிக்கடி குறைந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த பக்கத்துக்கு வீடு பெண்கள் இதுகுறித்து நாகம்மாளிடம் முறையிடத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருபெண் நாகம்மாளின் நெஞ்சில் பலமாக அடித்துள்ளார். இதனால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து நாகம்மா புகாரளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நாகம்மாவை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், சிகிச்சைக்கு செல்லாமல் நாகம்மாள் நேராக வீட்டிற்கு சென்ற நிலையில் அன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். பக்கத்துவீட்டு பெண்மணியும் அவரோடு சேர்ந்து மேலும், 3 பெண்களும் சேர்ந்து தாக்கியதே தனது தாயின் மரணத்துக்கு காரணம் என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் நாகம்மாளின் மகள் கேட்டுக்கொண்டதை அடுத்து போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளன்னர்.
தெரு நாய் ஒன்றுக்காக பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.