"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. புத்திசாலியாக மாற இதை செய்யுங்கள்.!
பள்ளிப்பருவத்தில் ஏதேனும் தவறு செய்தால் ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைப்பார். அது தண்டனை அல்ல, மிகசிறந்த ஒரு உடற்பயிற்சி ஆகும். அப்படிபட்ட சிறப்புமிகுந்த தோப்புக்கரண பயிற்சியை தினசரி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் :
தினசரி ஒரு 5 நிமிடம் உங்கள் குழந்தைகளை தோப்புக்கரணம் போட வையுங்கள். இதனால், மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைந்து குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், மந்தமான மனநிலையில் உள்ள குழந்தைகள் தினசரி தோப்புகரணம் போடுவதன் மூலம் அவர்களின் மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்தால்.. எதிர்காலமே பாழாகிடும்.. உஷார்.. பெற்றோர்களே.!
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதின் மூலம் அறிவு கூர்மை அதிகரிப்பதோடு, உடலில் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறும். மேலும், முறையாக தோப்புக்கரணம் பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
முறையாக தோப்புக்கரணம் போடும் விதம் :
முதலில் நம் கால்களை நம் தோள்பட்டை அளவிற்கு பிரித்து வைத்து நிற்க வேண்டும். பிறகு, வலது கையால் இடது காது மடலையும் இடது கையால் வலது காது மடலையும் பிடித்தவாறு நிற்க வேண்டும். குறிப்பாக வலது கை இடது கை மேல் இருக்க வேண்டும். அதோடு, கட்டைவிரல் வெளிப்பக்கமும், ஆள்காட்டிவிரல் உள்பக்கமும் இருப்பது அவசியம். பின்பு, தலையை நேராக வைத்து மூச்சுக் காற்றை உள்ளிழுத்தவாறு உட்கார வேண்டும். பிறகு, மெதுவாக மூச்சுக் காற்றை வெளியிட்டவாறு எழுந்து நிற்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடம் செய்வதால் உடல் வலிமை மற்றும் புத்திக்கூர்மை அதிகரிக்கும். மேலும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த பயிற்சியை செய்து வர எளிமையாக சுகபிரசவம் ஆகும்.
குறிப்பு :
கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இதையும் படிங்க: முருங்கைக் கீரையுடன் முட்டை.. இப்படி பொரியல் செய்தால்.. எல்லோருக்கும் பிடிக்கும்.!