தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
ஆப்பிளிலும் ஆபத்து உண்டு தெரியுமா?! என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க!
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பழம் என்றால் அது ஆப்பிள் தான். இது "பழங்களின் ராஜா" என்று கூறப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் இதயம், மூளை, மற்றும் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.
ஆனால் ஆப்பிளில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், உடலுக்கு பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம். ஆப்பிளில் உள்ள அதிகப்படியான சர்க்கரையினால் நீரிழிவு நோய் ஏற்படும். ஒருநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிளை உட்கொண்டால் செரிமானக் கோளாறு ஏற்படும்.
அதிலுள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆப்பிளை ஜுஸாக குடிப்பதால், செரிமானக் கோளாறு, வயிறு வீக்கம் ஆகியவை ஏற்படும். மேலும் ஆப்பிள் ஜூஸினால் உடல் எடை அதிகரிக்கும்.
மேலும் அதிக விளைச்சலுக்காக விவசாயிகள் ஆப்பிளில் சில வேதிப்பொருட்களை அதிகளவில் உபயோகிக்கின்றனர். இந்த வேதிப்பொருட்கள் கொடிய நோயான கேன்சரை உருவாக்கும் கார்சினோஜெனை அதிகளவு கொண்டிருப்பதால் ஆபத்தான பழமாக ஆப்பிள் இருக்கிறது.