முதுமையிலும் எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு.? எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன கால மூட்டு வலி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் பாதிக்கிறது. குறிப்பாக முதுமையில் மூட்டு வலி என்பது மிகவும் கடினமான ஒன்றாக வயதானவர்களுக்கு இருந்து வருகிறது. இந்த வலியை போக்குவதற்கு பல மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவுகளை தருகிறது.
இவ்வாறு மூட்டு வலியை நீக்கி எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடவாட்டுக்கால் மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த முடவாட்டுக்கால் கிழங்கை எப்படி பயன்படுத்தலாம், வேறு என்னென்ன நன்மைகள் இதில் உள்ளது என்பதை பற்றி இப்படி விளக்கமாக பார்க்கலாம்?
ஏற்காடு, கொல்லி மலை போன்ற மலைப் பிரதேசங்களில் அதிகமாக கிடைத்து வரும் முடவாட்டுக்கால் கிழங்கை அப்பகுதிகளில் சூப் செய்து விற்று வருகின்றனர். தற்போது இந்த முடவாட்டுக்கால் கிழங்கு அனைத்து பகுதிகளிலும் சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
1. முடவாட்டுக்கால் கிழங்கில் கால்சியம் அதிகமாக நிறைந்துள்ளதால் இது எலும்புகளில் உள்ள மஜ்ஜையில் கால்சியத்தை அதிகப்படுத்தி மூட்டு வலி, முதுகு வலி போன்ற வலிகளை குணப்படுத்துகிறது.
2. முடவாட்டுகால் கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் இதை உணவாக எடுத்துக் கொள்ளும்போது செரிமான பிரச்சனையை சரி செய்து மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
3. இதயம் மற்றும் மூளையில் ஏற்படும் பாதிப்பால் பக்கவாதம், முடக்குவாதம் ஒரு சிலருக்கு ஏற்படும். இதனை குணப்படுத்த இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சிறந்த தீர்வாக இருந்து வருகிறது.
4. குறிப்பாக மாதவிடாயின் போது ஒரு சிலருக்கு அதிகமான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும். இதனை சரி செய்ய முடவாட்டுக்கால் கிழங்கை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முடவாட்டுக்கால் கிழங்கை சூப் செய்து தினமும் குடித்து வந்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும்.