"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
உடல் சூட்டை தணிக்கும் நுங்கு பாயாசம் செய்வது எப்படி?.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
உடல் உஷ்ணத்தை குறைக்கும் நுங்கு பாயாசம் எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
கோடை வெயில் வந்துவிட்டாலே உடலில் வெப்பம் அதிகரித்துவிடும். இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது. தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருந்தாலும் இது சரியாகாது.
உடல் உஷ்ணத்தை போக்கும் வகையில் இளநீர், தயிர், மோர், கரும்பு ஜூஸ், தர்பூசணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
இதனை நேரடியாகவோ அல்லது மாற்று முறையிலோ சாப்பிடலாம். இப்போது நுங்கு பாயாசம் சுவையாக எப்படி சுவையாக செய்வது என்பதனைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
பால் - 2 கப்
முந்திரி, பாதாம் - தேவைக்கேற்ப
நெய் - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - 2 சிட்டிகை
நுங்கு- 8
நாட்டு சர்க்கரை - கால் கப்
செய்முறை :
★முதலில் நுங்கின் மேல் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சவேண்டும்.
★அடுத்து அதில் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
★இப்போது மசித்து வைத்த நுங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும்.
★பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்க வேண்டும்.
★இறுதியாக சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான நுங்கு பாயாசம் தயாராகிவிடும்.