வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பலவித பிரச்சினைகளை போக்கும் கோவைக்காயின் மருத்துவ பயன்கள்!
நாம் அன்றாட உணவில் அதிகளவு காய்கறி வகைகளை சேர்த்துக் கொண்டாலே நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆனால் நாம் மருத்துவ குணம் நிறைந்த காய்கறிகளை ஒதுக்கி வைத்து சாப்பிட்டு வருகிறோம்.
அந்த வகையில் எளிதாக கிடைக்கும் கோவைக்காயில் மருத்துவ குணம் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே கோவைவக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நமது உடலில் ஏற்படும் சரும நோய்களான சொரியாசிஸ், படை, சொறி, சிரங்கு, தேமல் மற்றும் முடி உதிர்தல், பொடுகு, பல் சார்ந்த பிரச்சினை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கோவைக்காய் பயன்படுகிறது.
தோல் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் போன்ற நோய்களுக்கு தினமும் மூன்று வேளை கோவைக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கொடுக்கும். அதேபோல் கோவைக்காய் ஜூசை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும்.
அதேபோல் தலையில் ஏற்படும் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு கோவைக்காய் ஜூஸ் நல்ல பலன் கொடுக்கிறது. மேலும் கோவைக்காயை, எலுமிச்சை பழத்துடன் சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.
பல் வலி, ஈறுகளில் வலி மற்றும் வீக்கம், ரத்தக்கசிவு மற்றும் மஞ்சள் கரை போன்ற அனைத்தையும் கோவைக்காய் ஜூஸ் குறைக்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.