விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
உங்களின் வீட்டில் கொசுத்தொல்லையா இருக்குதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.!
பொதுவாக மழைக்காலங்களில் வீடுகள் மற்றும் அதனை சுற்றி தேங்கி இருக்கும் நன்னீரில், கொசுக்கள் முட்டையிட்டு தங்களின் சந்ததிகளை பெருக்கி நமக்கு பெரும் தொல்லையாக அமையும்.
இரவு நேரங்களில் வீடுகளின் கதவை திறந்து வைத்து உட்கார முடியாத அளவு சில இடங்களில் கொசுத்தொல்லை மக்களை கடுமையாக வாட்டி வதைக்கும்.
பச்சிளம் குழந்தைகள் உள்ள வீடுகளிலும் அதே நிலை ஏற்படும் என்பதால், குழந்தைகளை கொசுத்தொல்லையில் இருந்து பாதுகாக்க பெற்றோர் படாத அவதிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இயற்கையாக வீட்டுக்குள் கொசு வருவதையும், அது கடிப்பதையும் நம்மால் தடுக்க இயலும். அந்த வழிமுறைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
கற்பூரவள்ளி, கற்றாழை சாறுகளை நீர்விட்டு வீடெங்கும் தெளித்துவிட்டால் கொசுக்கள் வராது.
புதினாவை சிறிதளவு நீரிட்டு அரைத்து வீடுகளில் தெளிக்கலாம். இது இயற்கை கொசுவிரட்டியாக செயல்படும்.
யூகலிப்டஸ் இலையை காயவைத்து, இரவில் புகைபோட்டு கொசுக்களை விரட்டலாம். வேப்பிலை, நொச்சி இலைகளின் வாசனைக்கும் கொசுக்கள் வாராது. வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு வைத்தாலும் கொசுக்கள் வராது.
எலுமிச்சை இலைகளை கைகளில் எடுத்து சிறிதளவு கசக்கி, அதனை கை-கால்களில் பொசிக்கொண்டாலும், எலுமிச்சை வாசனைக்கு கொசு அருகில் அண்டாது.