வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
உடல் குளிர்ச்சியாக ஆரோக்கியம் நிறைந்த சீரகத் துவையல்.!
உடலில் உள்ள சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வழங்கும் சுவையான சீரகத் துவையல் செய்வது எப்படி என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - சிறிதளவு
சீரகம் - 1\4 கப்
செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் காய்ந்த மிளகாய், புளி, சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம் போன்றவற்றை சேர்த்து, வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, அதனை நன்றாக ஆற வைத்து, சிறிதளவு தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்க வேண்டும்.
இப்படி செய்தால், உடனடியாக சுவையான சீரகத் துவையல் தயாராகிவிடும். தேவைப்பட்டால், கடலை பருப்பு, கறிவேப்பிலை, கடுகு போன்றவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.