"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வீட்டில் ரவை சும்மா இருக்கா?.. அப்போ இன்றே மொறுமொறு ரவா வடை செய்து அசத்துங்கள்..! ஸ்பெஷல் ரெசிபி..!!
மொறு மொறுவென ரவா வடை எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
ரவையில் கிச்சடி மற்றும் உப்புமா என்று செய்திருக்கலாம். ஆனால் சூப்பரான ரவா வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 6
கருவேப்பிலை - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
ரவை - 1 கப்
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு மற்றும் ரவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
★அடுத்து அதில் உப்பு சேர்த்து கலந்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
★அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து மெதுவாக தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். ஏனெனில் ரவை ஊறும்போது திக்கான பதத்தில் வரும்.
★ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
★பின் நாம் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறுமொறு ரவா வடை தயாராகிவிடும்.