குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி.? எளிமையான முறையில் எளிதாக தவிர்க்கலாம்.!



how-to-stop-child-thumb-sucking


குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. அப்படியே விட்டு விட்டால் அவர்கள் வளர வளர அவர்களது பற்கள் மிகவும் பெரிதாகி அவர்களது முகத் தோற்றத்தையே மாற்றிவிடும். குழந்தைகள் பிறந்த நாட்கள் முதலே அவர்களது விரல்களை வாயில் வைப்பது வழக்கம். இதனை நாம் ஆரம்பத்தில் சரி செய்துவிட்டால் அவர்கள் விரல் சூப்புவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே குழந்தைகள் பிறந்த உடனே வாயில் கைகளை வைக்கும் போது குழந்தைகளின் கைகளில் கையுறையை அணிந்தாலே குழந்தைகள் வாயில் கை வைப்பதை தவிர்த்து விடுவார்கள். 

ஆனால் குழந்தைகள் வாயில் கை வைப்பதை தடுத்தால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அழுகை உண்டாகும். எனவே பெற்றோர்களும் தனது குழந்தை அழாமல் இருந்தாலே போதும் என்பதற்காக அதை பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆரம்பத்தில் நாம் குழந்தைகளுக்கு இதனை பழக்க படுத்தியதால் நாளடைவில் அவர்களால் அதனை கைவிட முடியாது. பொதுவாக குழந்தைகள் இரவு தூங்கும் பொழுது தான் வாயில் கை வைப்பதை கடைபிடிப்பார்கள். அப்போது சில பெற்றோர்கள் அவர்களது கை விரல்களில் வேப்பெண்ணை, மருந்தகங்களில் வாங்கிய கசப்பு மருந்து உள்ளிட்டவையை கைவிரல்களில் தடவுவார்கள். ஆனாலும் குழந்தைகள் அதை பொருட்படுத்தாமல் தங்களது விரலை வாயில் வைத்து சூப்புவதை கடைபிடிப்பார்கள். 

அந்த சமயத்தில், குழந்தையின் கைவிரலில் மிருதுவான பஞ்சை வைத்து, அதிகமாக இருக்கம் கொடுக்காமல், அதன் மீது லேசான துணிகளை வைத்து லேசாக சிறிய கட்டு போட்டால். ஓரிரு வாரங்களில் குழந்தைகள் விறல் சூப்புவதை தவிர்த்து விடுவார்கள். தயவு செய்து குழந்தைகள் விறல் சூப்புவதை தடுக்க கையில் சூடுபோடுவது போன்ற முட்டாள்தனமான செயல்களை செய்யாதீர்கள். அது குழந்தையை பெரிதும் பாதிக்கும்.