ஆசிரியர் பணி என்றால் என்ன? ஆசிரியர் தினத்தன்று நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது.



Importance of teachers day and its meaning

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமான கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்னனின் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஆசிரியர் தினம் கொண்டாடும் நமக்கு ஆசிரியர் பணி என்றால் என்ன என்பது பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

teachers day

ஆசிரியர் பணி என்றால் என்ன? 

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை ஆசிரியர் பணி. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தர வேண்டும். மனிதனின் வாழக்கைக்கு மிகவும் தேவையான ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவை அடங்கும்.

இப்பணியைச் செய்ய தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராக செயல்பட வேண்டும்.