ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர்..! நொடி பொழுதில் ஏற்பட்ட பயங்கரம்..! அதிர்ச்சி வீடியோ காட்சி.!



Man falling down from train video goes viral

செல்பி மோகம், டிக் டாக் மோகம் இப்படி தங்கள் உயிரையும் பணயம் வைத்து சில இளைஞர்கள் செய்யும் காரியம் பார்ப்போரை பதறவைக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் ரயில் கம்பியை பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயற்சிக்கிறார். நொடி பொழுதில், இளைஞரின் கை தவறி அவர் கீழே விழுகிறார். ரயில் சக்கரத்தில் அவரது கால்கள் மாட்டிக்கொண்ட போதும் எவ்வித காயங்கள் இன்றி அந்த இளைஞர் உயிர் தப்பி விட்டார். 

இளைஞர் கீழே விழுவதை பார்த்த ரயில் பயணிகள் அவரின் செயலை கண்டு கூச்சலிடுகின்றனர். இந்த வீடீயோவை இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நகரும் ரயிலில் இருந்து இறங்குவது - ஏறுவது ஆபத்தானது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இருக்காது. நொடி பொழுதில் உயிரை இழக்க நேர்ந்திருப்பார். தயவு செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என கூறியுள்ளது.