"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நீங்கள் நைட் ஷிப்ட் வேலை செய்பவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்.?
பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இரவில் தூங்காமல் விழித்திருப்பது தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இரவில் தூங்காமல் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இரவு நேர பணியில் ஈடுபடுபவர்களில் ஆண்களை விட, பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேர வேலையை குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தொடர்ச்சியாக ஒரு மாத காலம் இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இரவு நேர வேலை பார்த்தால் பிரச்சினை ஏற்படாது. இரவு நேர வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வெளிப்பட்டு உடலும், மனதும் சோர்வடைகிறது.
எனவே இரவு நேர வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அந்த வேலையை தவிர்த்து விட்டு பகலில் வேலை பார்ப்பதை வழக்குமாக்கி கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.