வலியுடன் தாம்பத்தியமா? காரணம் என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!



  Pain full Sexual Intercourse 

திருமணம் முடிந்த தம்பதிகள் தனிமையில் இருக்கும்போது, அவர்களின் இல்லற வாழ்க்கை தொடக்கத்தில் வலி மிகுந்த உடலுறவு என்பது இருக்கும். இது மருத்துவ முறையில் டிஸ்பேரோனியா என அழைக்கப்படுகிறது. தாம்பத்தியத்தின்போது, அதற்கு பின்னர் பிறப்புறுப்பில் ஏற்படும் வலி உடல், உளவியல் பிரச்சனை மூலமாக ஏற்படும். 

வலிமிகுந்த தாம்பத்தியத்திற்கு பெரும்பாலான காரணமாக அமைவது உயவு இல்லாதது. கர்ப்பப்பை வாய் சுரப்பி சளி போன்ற திரவத்தை உடலுறவின்போது சுரக்கும். இது தாம்பத்தியத்திற்கு முந்தைய உடல் தூண்டலின் வாயிலாக ஏற்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வலிமிகுந்த தாம்பத்தியம் நேரலாம். 

18 plus

ஈஸ்டிரோஜன் அளவு

யோனிக்கு அருகில் இருக்கும் பார்த்தோலின் சுரபி, ஸ்கீன் சுரப்பி தாம்பத்தியத்தில் அதிக உயவு தன்மையை வழங்கும் திரவத்தை ஏற்படுத்தும். முன்விளையாட்டுகள் வாயிலாக பெண்ணுக்கு உணர்ச்சி தூண்டப்படவில்லை என்றால், அது உடலுறவின் போது வலியை தரும். புதிதில் இவ்வாறான வலி இருப்பது இயல்பானது. அதேபோல, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், ஈஸ்டிரோஜன் அளவு குறைவாக இருந்தாலும் வலி உண்டாகும். 

இதையும் படிங்க: மேகத்தின் மேலே உலவிய மர்ம உருவம் என்ன? வைரல் வீடியோ.. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.!

உடல்நல பிரச்சனை

யோனியின் சுவர் தசையில் தன்னிசை பிடிப்பு, சரிவர வளர்ச்சியை எட்டாத யோனி, ஹைமன் ஜவ்வு யோனி திறப்பை மூடி வைப்பது, சிறுநீர்ப்பாதை தொற்று, கருப்பை சரிவு, இடுப்பு அலர்ஜி நோய், கருப்பை நார்த்திசுக்கட்டி, மூலநோய் காரணமாகவும் தாம்பத்தியத்தில் வலி ஏற்படும். தாம்பத்தியத்திற்கு முன்பு, தூண்டலின் காரணமாக ஆணுக்கு 2 மில்லி திரவம் சுரக்கும். இது தாம்பத்தியத்தில் உயவை கொடுக்கும். மேற்கூறிய அனைத்தும் உளவியல் சார்ந்த காரணமாக கவனிக்கப்படுகிறது.

18 plus

அதிக பயம்

அதேநேரத்தில், உணர்ச்சி சார்ந்த காரணங்களை பொறுத்தவரையில், உடல் சோர்வு, மனசோர்வு, உடல் தோற்றம் பற்றிய கவலை, நெருக்கத்தில் உண்டாகும் உறவு சிக்கல் தொடர்பான பயம் போன்றவை பிரதான இடத்தை பெறுகிறது. வாழ்வியலில் ஏற்படும் மனஅழுத்தம் இயற்கையாக இடுப்பு தசை பகுதிகளை இறுக்கமடைந்து தாம்பத்திய வலியை தருகிறது.

சரி செய்ய சில டிப்ஸ்

மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், ஈஸ்டிரோஜன் அளவு குறைவுள்ள பெண்களுக்கும், உடலுறவின்போது திரவம் சுரக்காத காரணத்தால் உயவு அதிகமாகி வலி ஏற்படுகிறது. இதற்கு வெண்டைக்காய், ஆளி விதை, சோயாபீன், உளர் அத்திப்பழம், பேரிட்சை பழம், கருப்பு திராட்சை, பூண்டு, எள்ளு, முட்டைகோஸ், காலிப்ளவர், வேர்க்கடலை, பாதாம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், கோதுமை சாப்பிடலாம். யோகாவின் வாயிலாகவும் இதனை சரி செய்யலாம். 

சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.