உங்களின் பென்சிலில் HB என்பதை பார்த்திருக்கீங்களா?.. அது சொல்வது என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!



Pencil HB Range Details in Tamil

நமது வாழ் நாட்களில் நாம் பென்சில் என்பதை கட்டாயம் உபயோகம் செய்து இருப்போம். பள்ளிகளில் கொடுக்கும் வீட்டுப்பாடங்கள் முதல் நாம் முதன் முதலில் வரையும் வரைபடங்கள் வரை கருப்பு பென்சில் உதவியுடனே அதனை தொடங்குவோம். 

இந்த பென்சிலின் மேல்புறம் HB, 2HB என்று அடையாளக் குறிப்புகள் இருக்கும். இதனை மொத்தமாக வாங்கும் போது அதன் பாக்கெட்டுகளில் இதற்கான அடையாளம் இருக்கும். 

Pencil

HB என்றால் என்னவென்று தெரியுமா?. இந்த அளவுகளை வைத்து பென்சிலின் கருமை நிறத்தையும், கடித்தன்மையையும் குறிப்பிடுவார்கள். H என்றால் Hardness கடினத்தன்மை என்று பொருள்படும். B என்றல் Blackness என்று பொருள்படும். 

நாம் பொதுவாக எழுத பயன்படுத்தும் பென்சில் ரகம் HB வகையை சார்ந்தது ஆகும். இது பொதுவான பயன்பாட்டிற்கு உதவுகிறது. ஓவியர்கள் பெரும்பாலும் பிறரக பென்சிலை உபயோகம் செய்வார்கள். HB-ல் அதிகபட்சமாக 8 வரை அளவீடுகள் இருக்கும். நமது தேவைக்கேற்ப அதனை தேர்ந்தெடுத்து உபயோகம் செய்யலாம்.