தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
தீவிர தலைவலியால் அவதிப்படுறீங்களா?.. காரணம் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்கா..!
உறக்கத்தை நாம் தொலைத்தால் தலைவலி கட்டாயம் ஏற்படும். வைரஸால் ஏற்படும் காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறியாகவும் தலைவலி உண்டாகும். மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்தல், நோயின் தாக்கத்தினை முற்றவிடுவது போன்றவையும் மனநோயாக மாறுகிறது.
குறுகிய தலைவலி, நீண்ட தலைவலி நெற்றியின் இரண்டு பக்கத்திலும் இருக்கும் காற்று சிற்றலை காரணமாக ஏற்படுகிறது. இது குளிர் தாக்குதலால் உட்புற ஜவ்வு வீக்கமடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜி ஏற்படும். இதனால் ஏற்படும் தலைவலி காது, தொண்டை நிபுணரின் அறிவுரைப்படி 5 நாட்கள் மாத்திரை உட்கொள்ள சரியாகும்.
மூக்கில் நாடுசுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் போன்றவை இருப்பினும் அவ்வப்போது தலைவலி வரும். கண்பார்வை குறைபாடு கொண்டோர் பின்பக்க தலைவல்லியை அனுபவிப்பார்கள். கண்களில் நீரின் அழுத்தம் அதிகமாகும் பட்சத்திலும் தலைவலி உண்டாகும்.
ஒருபக்கம் தலையில் ஏற்படும் ஒற்றைத்தலைவலி, நீண்ட நேரம் தொடர்ந்து இருக்கும். வாந்தி எடுக்கும் பட்சத்தில் குறையும். சிலருக்கு இவை ஆண்டுக்கணக்கில் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை இன்றி வலிநிவாரணியை எடுத்தால், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ஒற்றைத்தலைவலி ஏற்படும்.
இரவு நேரத்தில் கண்விழித்து புத்தகம் படிப்போர், இரவுநேர வேலை பார்ப்போர், டிவி, கம்பியூட்டர் உட்பட ஸ்மார்ட் சாதனங்கள் பயன்படுத்துவோர் தலைவலியால் அவதிப்படலாம். இவர்கள் உறக்கத்தை இழப்பதால் தலைவலி காரணமாக அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு முன்பக்க தலை வலி, நடக்கும்போது தள்ளாட்டம், மயக்கம் ஏற்படும். இவ்வாறானவர்கள் மனநல நிபுணரை சந்திக்கலாம்.
எதிர்பார்த்த விதமாக தாழ்வான வீடுகளில் செல்லும்போது தலையில் ஏற்படும் காயம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஏற்படும் காயத்தினை கவனிக்காமல் விடுவதும் உட்காயம் காரணமாக தலைவலி பாதிப்பை உண்டாக்கலாம்.
உறக்கத்தில் இருந்து தீராத தலைவலி காரணமாக அவ்வப்போது எழுந்து உட்கார்ந்தால், மூளையில் நீர்க்கட்டி மற்றும் ம்புற்றுநோய்கட்டி உண்டாக வாய்ப்பு என புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக சிகிச்சை பெறுவது அவசியம். ஆதலால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
தலைவலி சார்ந்த பிரச்சனையில் அலட்சியம் காண்பிக்காமல், மருத்துவரை நாடி சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது நல்லது. நல்ல உறக்கம், பணியின்போது ஓய்வு, இயன்றளவு மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடைத்தால், உரிய நேரத்தில் உணவை தவறிதலும் தலைவலியை உண்டாக்கும். இன்றளவில் பலரும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் தலைவலியால் அவதிப்படுவது நடந்திருக்கும். அதற்கு காரணம் இதுவேயாகும்.