தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சுவை சத்து நிறைந்த வரகு அரிசி ஃப்ரைடு ரைஸ்... கிட்ஸ் ஃபேவரிட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.!!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே விதமான உணவை சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு போர் அடிக்கும். இதனால் தினம் ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்கும் போது குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள். குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் ஸ்பெஷலாக பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வரகரிசி ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 2கப் வேக வைத்த வரகு அரிசி, 3 ஸ்பூன் எண்ணெய், 2 ஸ்பூன் நறுக்கிய கேரட், 2 ஸ்பூன் நறுக்கிய பீன்ஸ், 2 ஸ்பூன் நறுக்கிய சிகப்பு குடைமிளகாய், 2 ஸ்பூன் நறுக்கிய பச்சை குடைமிளகாய், 2 ஸ்பூன் நறுக்கிய மஞ்சள் குடைமிளகாய், 2 ஸ்பூன் கார்ன், ஸ்பிரிங் ஆனியன் தேவையான அளவு மற்றும் உப்பு தேவையானஅளவு, 1/2 ஸ்பூன் மிளகு தூள்.
செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள், கார்ன் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் வேகவைத்துள்ள வரகு அரிசி சாதத்தையும் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். எல்லாம் ஒன்றாக கலந்ததும் இறுதியாக அதனுடன் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். இதில் எல்லா காய்கறிகளும் சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகும்.