முதல் இரவில் ஏன் மல்லிகை பூ பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? அட இதான் காரணமா?



Why jasmine flower using for first night

பொதுவாக மல்லிகை பூ மிகவும் அபூர்வமானது. பெண்கள் அனைவரும் விரும்பி சூடும் பூக்களில் மல்லிகை பூவும் ஓன்று. சாமிக்கு பூஜை செய்வதிலும் மல்லிகை பூவுக்கு மிகப்பெரிய இடம் உண்டு.

மல்லிகை உடலுக்கும் மனதுக்கும் மிகவும் புத்துணர்ச்சி தர கூடியது. இதனால் முதல் இரவில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட முடியுமாம். இதற்காகவே முதல் இரவில் மல்லிகை பூ பயன்படுத்தப்படுகிறது.
  
மல்லிகை பூ பொதுவாக இரவில்தான் பூக்கும். மிகவும் நறுமணம் கொண்டது. மல்லிகை பூ மூளையின் கீழ் பகுதியில் உருவாகும் வெப்பத்தை குறைத்து தலை குளிர்ச்சியடைய செய்கிறது. மேலும் உறவுகளுக்குள் நேசத்தையும் அதிகரிக்கும்.

relationship

மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

சில பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும் அந்தமாதிரியான பெண்கள் ஒரு கையளவு மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்டும்போது தாய்ப்பால் அதிகம் சுரப்பது குறையும்.

relationship
நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்கும். குளிர்ச்சி அடையும். தேயிலையுடன், கைப்பிடி அளவு மல்லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்தலாம். புத்துணர்ச்சி கிடைக்கும்.

மல்லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்கத்தைக் குறைக்கும், நீர்ச்சத்தை அதிகரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.

மல்லிகை வாசனை, சிலருக்கு ஒவ்வாது. அதற்குக் காரணம், மல்லிகையில் உள்ள எண்ணெய். இது, நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.