திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிமுக பாஜக கள்ள சாராயம் விற்றதா.? திமுக-வின் ஆர்.எஸ் பாரதி பேட்டியால் சர்ச்சை.!!
அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்றதாக தகவல்கள் வருகின்றன என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியிருக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்த பல பேர் மரணமடைந்த நிலையில் தற்போது வரை 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது.
கள்ள சாராய விவகாரம் தொடர்பாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஆளுநரை இன்று சந்தித்த அவர் அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக முக்கிய புள்ளிகள் பலருக்கும் இந்த விஷ சாராயத்தில் தொடர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: #BigBreaking: கள்ளக்குறிச்சி விஷசாராய மரண விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000/-, கல்விச்செலவு ஏற்பு - அதிமுக அறிவிப்பு.!
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆர் .எஸ் பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர் பிஜேபி மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் கள்ள சாராயம் விற்றதாக தகவல் வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை வைத்து இபிஎஸ் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திட்டமிட்டு அரசியல் செய்யாமல் நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு அனைவரும் கட்சி பாகுபாடுகளை மறந்து ஆளும் திமுகவிற்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் - திமுக தலைமை அறிவிப்பு.!