#LokSabha2024 | "தமிழகத்தை காப்பாத்த அதிமுக ஜெயிக்கணும்" - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!!



admk-must-win-to-save-tamilnadu-eps-interview

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இவை தவிர நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

பல சுயேட்சை வேட்பாளர்களும் பாராளுமன்ற தொகுதியில் களத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து  கொண்டது. இதனைத் தொடர்ந்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

Poiticsதேமுதிக எஸ்டிபிஐ புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் தேர்தல் களத்தில் உள்ளன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. தங்களது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் தனது தேர்தல் பரப்புரையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் குறைகளை பொதுமக்களிடம் பட்டியலிட்டு வருகிறார்.

Poiticsஇந்நிலையில் இன்று பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் கீழ் தமிழகம் கடன் வாங்குவது மற்றும் போதை பொருள் விற்பனை ஆகியவற்றில் முதலிடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பத்து சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை எனவும் கூறினார். தற்போது மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வில்லை என்றால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.