#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தி.மு.கவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை: பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பின்பு அண்ணாமலை அதிரடி..!
சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் துவக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவங்கி வைத்தார். இதனையடுத்து விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ராஜாஜி பவனில் உள்ள கவர்னர் மாளிகை சென்றடைந்தார்.
அங்கு தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம், இரவு சுமார் 11 மணி வரை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குபிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் குறித்து பேசியதாவது:-
பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை, ஆகவே அரசியல் எதுவும் பேசவில்லை. பா.ஜனதா எப்போதும் கொள்கை சித்தாந்தத்துடன் பயணம் செய்யும் கட்சி. அதை பா.ஜனதா எப்போதும் மாற்றிக் கொள்ளாது. கடந்த முறை பிரதமர் சென்னை வந்து இருந்த போதே, முதலமைச்சர் தாராள மனதுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் இது அரசியல் களம் இல்லை எனவும் விமர்சித்திருந்தேன்.
இன்று நான் இந்த முறை தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன். எல்லா நேரங்களிலும் ஆளும் கட்சியை விமர்சித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை சரியான தீர்ப்பை அளித்துள்ளது. நேற்று மாலை முதலே தமிழக அரசு தனது தவறை சரி செய்ய தொடங்கி இருந்தது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் நேற்று முதலே பிரதமர் படம் இடம் பெற்று இருந்தது.
பாஜக ஒரு கட்சியாகப் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. சில தொண்டர்கள் அப்படி கேட்டிருக்கலாம். ஒரு கட்சியாக நாங்கள் விளம்பரங்ககில் பிரதமர் படத்தைப் போட வேண்டும் என்று கூறவில்லை. கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவரைப் போல நடந்து கொண்டார் என விமர்சித்து இருந்தேன். ஆனால், இந்த முறை அவர் முதலமைச்சர் போல நடந்து கொண்டார்.
இன்று ஒரு தமிழனாக நான் பெருமை கொள்கிறேன். தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் இன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. நமது கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. 5 ஆயிரம் ஆண்டுக்கால கலாசாரம் இந்த நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. இதற்காகத் தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் பா.ஜனதா சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியைப் பாராட்டுவதால் அவர்களுடன் கூட்டணி என்று அரத்தம் கொள்ளகூடாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.