தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
Lok Sabha 2024: "வெற்று விளம்பரத்தில் அரசியல் செய்யும் கட்சி பாஜக" எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!
2024 ஆம் வருட பொதுத்தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கட்சியை விமர்சனம் செய்த பாஜகவின் மதுரை வேட்பாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக என எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெற்ற எத்தனை தேர்தல்களில் அதிமுக ஒன்றரை கோடி வாக்குகளை பெற்றிருக்கிறது.? எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஆளுமையான தலைவர் இல்லை. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலோடு அதிமுக காணாமல் போகும் என விமர்சித்தார். பாஜகவின் இந்த பேச்சிற்கு சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர் உன்னை போல எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் கட்சியில் உள்ளவர்களைப் போல வீட்டிலிருந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல நாங்கள். கட்சிக்காக அரை நூற்றாண்டுகளாக உழைத்திருக்கிறோம். இதேபோன்று ஏதாவது கருத்துக்களை பேசி வெற்று விளம்பரத்தில் அரசியல் செய்வதுதான் பாஜக. 98 பொதுத்தேர்தலில் ஜெயலலிதா பாஜகவை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் அந்தக் கட்சியின் அடையாளம் யாருக்குமே தெரிந்திருக்காது என கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.