#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தி.மு.க அரசின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: அண்ணாமலை அதிரடி..!
தி.மு.க.,வின் 2 ஊழல் பட்டியலை ஜூன் மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு நேற்றைய நாள் சரித்திர நாள். தமிழக மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழ செய்தது. பிரதமர் வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ் கலாசாரத்தை தோளில் தூக்கி மண்ணை நேசித்து பிரதமர் பேசினார்.
பிரதமரின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள் விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்தி பிடித்திருக்கிறார் பிரதமர். சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் முதல்வர் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான். எல்.முருகன், பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி.
இந்தியாவிலேயே தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் அறிவுதிறன் குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுக.,வுக்கு தான் தர வேண்டும். தாய்மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கவில்லை. புதிய தேசிய கொள்கை மூலம் அதை கட்டாயமாக்கியவர் பிரதமர். ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்துவிட்டு தமிழ்மொழியை காப்பது போல் முதல்வர் பேசுகிறார்.
ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.