வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
திமுகவின் அமைதி பேரணியில் உயிரிழந்த மாமன்ற உறுப்பினர்! திமுகவினர் அதிர்ச்சி!!
இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம். ஐந்தாவது வருடம் நினைவு தினத்தை அனுசரிக்கப்படும் நிலையில், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த அமைதி பேரணியில் ,அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று, கருப்பு சட்டை அணிந்து ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ஓமந்தூரர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த பேரணியில் பங்கேற்ற திமுகவின் செயற்குழு உறுப்பினரும், 146 வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் இந்த அமைதி பேரணி தொடங்கப்பட்ட சற்று நேரத்தில் மயங்கியுள்ளார். அவருடன் வந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய நிலையில், அவர் எழும்பாததால் ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.