தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
போதைப் பொருள் கடத்தல் விவகாரம்.. சிறைக்குச் செல்லும் உதயநிதி.?! இ.பி.எஸ் சூளுரை.!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் நெருக்கமாக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வத்திற்கு ஆதரவாக அக்காட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி உதகை, கோவை, காரமடை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி அந்த நபருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக இருந்ததற்காக அமைச்சர் உதயநிதி விரைவில் கைது செய்யப்படுவார். இது மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே நடந்து விடும். அதிமுக ஆட்சியை இரண்டு ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது.
எனவே வாரிசு அரசியலுக்கு பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அதேபோல் அதிமுகவை முடக்க சதி செய்ய எட்டப்பர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள் என கூறியுள்ளார்.