#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார் படத்தை இதுக்கு மேல யாராலும் கலாய்க்க முடியாது! வைரலாகும் அதிரடி ட்விட்!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் இன்றுவரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் கதை திருட்டு கதை என ஒருபக்கம் விவகாரம் செல்ல பின்னர் ஒருவழியாக சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்க்கார் படத்தை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் படித்ததில் பிடித்தது...."கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று, ட்வீட் செய்து உள்ளார்.
திரைக்கு வந்த நேற்றே தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தை இணையத்தில் விட்டு விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, சர்கார் படத்தில் இடம் பெற்று உள்ள காட்சிகள் தமிழக அரசியலை வெளுத்து வாங்குவதாக உள்ளது என, பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், படித்ததில் பிடித்தது...."கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என்று ட்வீட் செய்து உள்ளார்.
படித்ததில் பிடித்தது.
— H Raja (@HRajaBJP) November 7, 2018
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா