ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
சீமானின் சமீபத்திய சர்ச்சை பேச்சு; டிடிவி தினகரன் விமர்சனம்.!
பிற கட்சித்தலைவர்கள் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் பேசினார்.
தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "சீமான் உணர்ச்சி மிகுதியில் ஒரு ஆண்டுகாலமாக பேசி வருகிறார். அவரின் மீதான விமர்சனம், பேச்சுக்கள், ஒரு அரசியல்வாதியாகவே வருத்தப்படும் வகையில் இருக்கிறது. பிறரையும், மறைந்த அரசியல் தலைவர்களையும் தரக்குறைவாக பேசுகிறார். பிற மனிதர்களைப்பற்றி, கட்சித்தலைவர்களைப் பற்றி வாய்க்கு வந்தாற்போல பேசுவது உண்மையில் வருத்தம் தருகிறது.
இதையும் படிங்க: தவெக மாநாடு; ட்ரெண்டிங்கில் மக்கள் தலைவர் அண்ணாமலை...!
போதைக்கு அடிமையான இளைய சமுதாயம்
அதனை அவர்தான் சரிசெய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது அனைவர்க்கும் தெரியும். காவல்துறை ஏவல் துறையாக பயன்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் காவலர்களை அவமதிக்கிறார்கள். மன்னார்குடியில் டிஎஸ்பி-ஐ பிடித்து தள்ளுகிறார்கள். மாணவர்கள், இளைய சமுதாயத்தை போதைக்கு அடிமையாக்கி இருக்கிறார்கள்.
வெறுப்பில் மக்கள்
இந்த அச்சஉணர்வு தமிழகம் முழுவதும் இருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் பணநாயகத்தின் வாயிலாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் மீது இருந்த வெறுப்பால் திமுக ஆட்சிக்கு வந்தது. இன்று அதனையும் தாண்டி மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அந்த வெறுப்பு 2026 தேர்தலில் எதிரொலிக்கும்" என பேசினார்.
இதையும் படிங்க: அரசியல் விமர்சனத்திற்காக உயிரையே பணயம் வைத்த பாஜக மாநில தலைவர்; தீவிர உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.!