மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Election2024: இந்தியாவின் முதல் பிரதமர் யார்.? சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்.!! வைரலான வீடியோ.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். முதல் கட்ட வாக்குப் பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வலதுசாரிகளின் ஆதரவாளராக இருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டி ஒன்று மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை கிண்டல் செய்து வருகின்றனர். தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத் அந்த பேட்டியின் போது இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
All these Hindu supremacist influencers need to be sent to a lunatic asylum! pic.twitter.com/UQ7eYcvMfH
— Ashok Swain (@ProfAshokSwain) April 4, 2024
இந்த பேட்டியின் போது கேள்வி கேட்க முயன்ற நெறியாளரை நிறுத்திய கங்கனா இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் இப்போது என்ன ஆனார்.? என நெறியாளரை நோக்கி கேட்டார். அப்போது நெறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் பிரதமர் இல்லை எனக் கூறினார். இதனால் சற்று தடுமாறிய கங்கனா பின்பு சுதாகரித்து கொண்டு அவரை எப்படியோ சமாளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் இந்தியாவின் முதல் பிரதமரே தெரியாத இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என கலாய்த்து வருகின்றனர்.