"தமிழின துரோகி கருணாநிதி; என்னை அரெஸ்ட் பண்ணு.." சாட்டை துரைமுருகன் கைதை கண்டித்து சீமான் ஆவேசம்.!!



karunanidhi-is-a-traitor-seeman-angry-speech

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரது கைதை கண்டித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கருணாநிதி புனிதரா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார் .

சாட்டை துரைமுருகன் கைது

கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவமதிக்கும் பாடல் ஒன்றை பாடி கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக குற்றாலத்தில் இருந்த அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

tamilnadu

சீமான் கண்டனம்

சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர் ஏற்கனவே இயற்றப்பட்ட பாடலை தான் சாட்டை துரைமுருகன் பாடியிருக்கிறார். அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். என்னை விட அதிகமாக சாட்டை துரைமுருகன் கருணாநிதியை விமர்சித்து விட்டாரா.? எனவும் கேள்வியை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வருகிறார் ராஜமாதா... மீண்டும் களமிறங்கிய சசிகலா.!! கலக்கத்தில் இபிஎஸ் கோஷ்டி.!!

கருணாநிதி புனிதரா.?

மேலும் தொடர்ந்து பேசிய சீமான் கருணாநிதி புனிதரா.? என கேள்வி எழுப்பினார். மேலும் கருணாநிதி தமிழின துரோகி என குறிப்பிட்ட சீமான், சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை இப்போது நான் பாடுகிறேன். தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறினார். தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் மட்டும் 131 படுகொலைகள் நடைபெற்றதை சுட்டிக்காட்டினார். தன்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்வதன் மூலம் தனக்கு நெருக்கடியை கொடுக்க பார்க்கிறதா அரசு.? எனவும் கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வந்த பின்பு கருணாநிதியை புனிதராக்க திமுக அரசு முயற்சி செய்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பரபரப்பு... அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்.!! இபிஎஸ்-க்கு எதிராக திரும்பும் முன்னாள் அமைச்சர்கள்.!!