பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பரபரப்பு... அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்.!! இபிஎஸ்-க்கு எதிராக திரும்பும் முன்னாள் அமைச்சர்கள்.!!
பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்டம் கண்ட அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி ஆட்டம் காண தொடங்கியது. அவரது மறைவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவின் மீது தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் உறவை முடித்துக் கொண்டது அதிமுக.
சரிந்த வாக்கு சதவீதம்
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டதை தொடர்ந்து அதிமுக கட்சி தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. எனினும் அந்தக் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும் பல இடங்களிலும் மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது.
இதையும் படிங்க: "மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும்தான் சமூக நீதியா.?.." திமுக அரசுக்கு பா ரஞ்சித் கேள்வி.!!
வெடித்த உட்கட்சி பூசல்
தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட பஞ்சாயத்து இன்று மிகவும் மோசமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சி.வி சண்முகம், தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 8 பேர் இபிஎஸ்-க்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: தர்மயுத்தம்: "எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம்.." ஓபிஎஸ் கண்டன அறிக்கை.!