ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; கும்பகோணத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரயில் மறியல்.!



KS azhagiri Train strike for Rahul Gandhi case

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் ராகுலுக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால், அதே நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் தலைமையில், கட்சியினர் உட்பட 4 பேர் இரயிலை மறித்து போராட்டம் செய்தனர். 

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் இரயிலை இடைமறித்து கே.எஸ் அழகிரி மற்றும் அவருடன் இருந்த 4 ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

இதனால் இரயில்வே பாதுகாப்புத்துறையினர் கே.எஸ் அழகிரியுடன் சமாதானம் பேசி இரயில் மறியல் போராட்டத்தை கைவிட வைத்தனர். பின்னர், அந்த இரயிலில் ஏறி கே.எஸ் அழகிரி சென்னை புறப்பட்டார்.