#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகம்..! ராகுல் காந்தி கொந்தளிப்பு..!!
சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருட்டு, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்த பல வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மது போதையில் கையில் சிகரெடுடன் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பார்க்கும் அனைவரும் முகம் சுளிக்கும் வகையிலும் எரிச்சல் ஊட்டும் வகையிலும் உள்ளது. இந்த வீடியோவில் தரையில் அமர்ந்திருக்கும் பழங்குடி நபரை சேர்ந்தவர் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் பயத்தினால் போலீசில் புகார் அளிக்காமல் இருக்கிறார்கள்.
தற்போது அந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் என்பவர் அம்மாநில முதலமைச்சரை டாக் செய்து அதில் "பழங்குடியினரின் வாழ்வாதாரத்தையும் நலன்களை பற்றியும் பொய்யாக மட்டுமே பேசி வரும் பாஜக தலைவர் அந்த இன மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார் என்று குறிப்பிட்டு சாரியுள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆகியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது ஐபிசி 294 மற்றும் 504, எஸ்.சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது"
"பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்! என்று அவர் பதிவிட்டிருந்தார்.
भाजपा राज में आदिवासी भाइयों और बहनों पर अत्याचार बढ़ते ही जा रहे हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2023
मध्यप्रदेश में एक भाजपा नेता के अमानवीय अपराध से सारी इंसानियत शर्मसार हुई है।
यह भाजपा का आदिवासियों और दलितों के प्रति नफ़रत का घिनौना चेहरा और असली चरित्र है!