மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலைஞர் மீது விமர்சனம்... சீமானுக்கு விரைவில் ஆப்பு ரெடி.!! அமைச்சர் சேகர் பாபு பேட்டி.!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சாட்டை துரைமுருகன் கைது
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கலைஞரை விமர்சனம் செய்ததாக கூறி சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கைதிற்க்கு கண்டனம் தெரிவித்த சீமான் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.
கலைஞர் மீது சீமான் விமர்சனம்
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேசிய சீமான் தானும் கலைஞரை பலமுறை விமர்சனம் செய்ததாகவும் தைரியம் இருந்தால் தன்னை கைது செய்து பார்க்குமாறு கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதி தமிழின துரோகி எனக் குறிப்பிட்ட சீமான் அவர் புனிதர் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இவரது பேச்சுக்கு தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையும் படிங்க: "தமிழின துரோகி கருணாநிதி; என்னை அரெஸ்ட் பண்ணு.." சாட்டை துரைமுருகன் கைதை கண்டித்து சீமான் ஆவேசம்.!!
அமைச்சர் சேகர்பாபு பதிலடி
இந்நிலையில் சீமானின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானுக்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பு கலைஞரை விமர்சித்ததற்கு சீமான் மன்னிப்பு கேட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சீமான் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வருகிறார் ராஜமாதா... மீண்டும் களமிறங்கிய சசிகலா.!! கலக்கத்தில் இபிஎஸ் கோஷ்டி.!!