#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓ.பன்னீர்செல்வம் செய்த ஏமாற்று வேலைக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்!. தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேச்சு!.
அ.ம.மு.க தலைமை செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என கூறுகிறார்.
ஆனால் டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் யார் என்று தமிழகத்திற்கு தெறித்திருக்கவும் மாட்டார், தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்கவும் முடியாது. ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியது டி.டி.வி.தினகரன் தான் என்பது அவருக்கே தெரிந்த விஷயம் தான்.
வரும் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக டெபாசிட் இழக்கும். நாங்கள் எம்எல்ஏ பதவியில் இருக்கும்போதே அதிமுக சார்பில் எங்களை அழைத்தபோது நாங்கள் யாரும் செல்லவில்லை. இப்போது பதவி இல்லாதபோது எப்படி செல்வோம். நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் செல்ல மாட்டோம், எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என பகல் கனவு காண்கிறார் என கூறினார்.
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அவர்கள் மதுரை ஆவின் இயக்குனர் பதவிக்கு கட்சித்தலைமை அனுமதியின்றி, அதிமுக சார்பில் இயக்குனர் பதவிக்கு போட்டியிட்டதோடு வேட்பாளர்களை பணம் கொடுத்து தோற்கடித்துவிட்டார்.
அந்த சமயத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவோம் என அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளித்ததால் ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். ஆனால் அவர்களுக்குள் என்ன பேரம் நடந்தது என்று தெரியவில்லை, அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துவிட்டனர்.
இந்த ஏமாற்று வேலையை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பேசினார்.