வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#Breaking: தென்மாவட்ட மக்களுக்கு உற்சாக செய்தி: முதல்வரின் வெள்ள நிவாரணம் அறிவிப்பு.!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை, 100 ஆண்டுகளுக்கு பின் உச்சகட்ட மழைப்பொழிவை வெளிப்படுத்தியது.
இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத வெள்ளத்தின் பிடியில் சிக்கி தத்தளித்தது. கடந்த 3 நாட்களை கடந்தும் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதிஉதவியாக ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 நிதிஉதவி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.