#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உண்மை காதல் என்றால் என்ன தெரியுமா?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் காதல் என்பது ஒரு கருவியாக மாறிவிட்டது. காதல் என்ற பெயரை வைத்து தற்போதைய சூழ்நிலைகளில் அதிகபடியான கொலைகளும், பாலியல் தொல்லைகளும் நிகழ்ந்து வருகின்றன.
முந்தைய காலங்களில் காதல் என்பது அனைவரிடமும் இருந்துதான் வந்தது. ஆனால் "அப்போதைய காதல்" காதலன் மற்றும் காதலிக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் தனியாகவும் சந்தித்துப் பேச மாட்டார்கள். அப்படிப்பட்ட காதல் 100% வெற்றி அடைந்ததாகவே கருதப்பட்டது.
ஒருவேளை அப்படிப்பட்ட காதலை வீட்டில் உள்ள நபர்கள் ஏற்காவிட்டால், குடும்பத்தினருக்காகவே அவர்களின் காதலை தியாகம் செய்து, அவர்களது அடுத்த வாழ்க்கை பயணத்தை நோக்கி பயணித்து சென்றனர். அதுவே உண்மை காதலாகவும் கருதப்பட்டது.
ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில், காதலனிடம் பேசவில்லை என்று கூட கொலை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன, ஒருவேளை ஒரு ஆண் சொன்ன காதலை பெண் ஏற்காவிட்டால் அதற்காகவும் கூட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனாலேயே இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல் கருதுகின்றனர்.
காதல் என்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அவர்களுக்காகவே ஒழுக்கமாகவும், கட்டுக்கோப்பாகவும் வாழும் வாழ்க்கை ஆகும். மேலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்காக அந்த காதலையே தியாகம் செய்யலாம் என்ற மனநிலை உள்ளவர்கள் செய்யும் காதல்தான் உன்னதமான காதல் ஆகும்.