சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இந்திய அணியின் சுழலில் சிக்கி தடுமாறி கொண்டிருக்கும் பாக்கிஸ்தான்.
ஆசிய கோப்பைக்கான தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வருகிறது. தற்பொழுது லீக் போட்டிகள் முடிவடைந்து 'சூப்பர்4 ' சுற்று நடைபெற்றது கொண்டிருக்கிறது. இந்த சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றிருந்தன.
இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் தற்சமயம் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அபாரமாக வென்றது. இதனால் இன்றைய போட்டியில் இந்தியாவை வென்றாக வேண்டிய கடினமான சூழலில் பாக்கிஸ்தான் களமிறங்குகிறது.
இதன் படி டாஸ் வின் செய்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் அந்த அணியின் கேப்டன் சர்பிரஸ் அஹ்மத் . இதன் படி துவக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் இமாம் உல் ஹக் மற்றும் பகார் சமான் களம் இறங்கினார்கள்.
ஆரம்பம் முதலே விக்கெட்டை இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக ஆடி அவ்வப்போது ரன்களை சேர்த்து வந்தனர். இந்நிலையில் துவக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சுழற் பந்து வீச்சாளர்களை பந்து வீச அழைத்தார் இதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
8 வது ஓவரின் கடைசி பந்தில் அந்த அணியின் இமாம் உல் ஹக் 10 ரன் ( 20 ) எடுத்த நிலையில் lbw முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து 14.3 வது ஓவரில் அந்த அணியின் மற்றோர் துவக்க மட்டையாளரான பக்கர் சமானும் 31 ( 44 ) ரன்களில் வெளியேறினார்.
இதனால்60ரன்களுக்குள் 2விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த நிலையில் அடுத்த ஒவேரிலேயே இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் அந்த அணியின் பாபர் அசாம் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் சர்பிரஸ் அஹ்மதுவும் , சோயிப் மாலிக்கும் அணியின் ஸ்கோரெய் உயர்த்த போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போழுது பாக்கிஸ்தான் அணி 18 ஓவர்களில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் அடிகொண்டிருக்கிறது. இந்தியா அணி தரப்பில் சாஹல், யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.